ஞாயிறு, 10 அக்டோபர், 2010
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் விஸ்வமடு மகாவித்தியாலய நூலகக்கட்டிடத்தில் இயங்கும்..!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் தற்காலிகமாக விஸ்வமடு மகாவித்தியாலய நூலகக்கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. அடிப்படை அத்தியாவசிய வசதிகள் எதுவும் செய்யப்படாமலேயே மீள்குடியேற்றம் இடம்பெறுவதாகவும் மழைகாலம் தொடங்கியுள்ளதால் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக கொட்டகையாவது அமைக்க தகரம், தடி,கம்புகள்,கிடுகுகள்,விவசாய உபகரணங்கள் உலருணவுப் பொருட்கள் உடனடியாக வழங்க ஆவன செய்யப்படவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக