சனி, 2 அக்டோபர், 2010

காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சமாதான பாதயாத்திரை..!

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் அநீதிகள் என்பவற்றைத் தடுப்பதற்காகக் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சமாதான பாதயாத்திரை இன்றுகாலை நடைபெற்றது. ஆரையம்பதிப் பிரதேச செயலகப்பிரிவில் நடைபெற்ற சமாதான பாதயாத்திரையை ஆரையம்பதி பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் 4ம் கடடையில் ஆரம்பித்து வைத்தார். இப்பாதயாத்திரை ஆரையம்பதி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு முடிவடைந்தது. இதேபோன்று காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் வைத்து காத்தான்குடி உதவி பிரதேச செயலாளார் திருமதி வில்வரட்னம் தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை காத்தான்குடி கலாசார மண்டபம் வரை நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக