வியாழன், 28 அக்டோபர், 2010

கட்டுகஸ்தோட்டை வாகன விபத்தில் 20மாத குழந்தை பலி..!

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் 20மாத குழந்தை உயிரிழந்துள்ளது இது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதியை எதிர்வரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை, மெதவலை பாதையில் பஸ் மோதி இம்மரணம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்த ஹஷினி தரூஷிகா என்ற குழந்தையின் பிரேத பரிசோதனையை கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.பீ. செனவிரத்ன நடத்தினார். பூதவுடல் நேற்றுமாலை கட்டுகஸ்தோட்டையிலுள்ள குழந்தையின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தமது குழந்தை மரணிக்க காரணம் பஸ் சாரதியின் கவனயீனமே என்று உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக