செவ்வாய், 12 அக்டோபர், 2010

நாடளாவிய ரீதியில் 2011ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு..!!

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் 2011ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு தேவையான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் 30 வருடங்களுக்கு பின்னர் சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது விசேட அம்சமாகும் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.பி.பி. சுரஞ்சனா வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். அதாவது 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இருக்கின்ற மக்களே சனத் தொகைக்கு உள்ளடக்கப்படுவர். அந்த வகையில் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் தங்கியிருக்காவிடின் அவர்கள் சனத்தொகை கணக்கெடுப்புக்கு உள்ளடக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக