புதன், 20 அக்டோபர், 2010

2011ம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுகளுக்காக 215 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

2011ம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுகளுக்காக 215 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டிம். ஜயரத்னவால் வரவுசெலவு யோசனைகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகள் ஆறு வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் பாரியளவு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இவை தவணைக்கட்டண முறையில் கொள்வனவு செய்யப்பட்டதால் பாதுகாப்புச் செலவுகளை உடனடியாக குறைக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த செலவுகளில் ஐந்தில் ஒருபகுதி பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக