திங்கள், 25 அக்டோபர், 2010
புலி ஆதரவாளர்கள் வேறு 0வழிகளில் நாட்டை சீர்குலைக்க முனைகின்றனர்-வெளிவிவகார அமைச்சர்..!
இலங்கையில் மீண்டும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டவிழ்த்து விடமுடியாது என அறிந்துகொண்ட புலி ஆதரவாளர்கள் வேறும் வழிகளில் நாட்டை சீர்குலைப்பதற்கு முனைப்புக் காட்டுகின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். இலங்கையில் மீண்டும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டவிழ்த்து விட முடியாது என அறிந்த புலி ஆதரவாளர்கள் வேறும் வழிகளில் நாட்டை சீர்குலைப்பதற்கு முனைப்புக்காட்டி வருகின்றனர் என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். லண்டன் விரிவுரை ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் வருகையைத் தடுப்பதற்கும், இலங்கைப் பொருட்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்பைத் தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் எடுக்கப்பட்டவை எனத் தெரிவிக் கப்படும் புகைப்படங்கள் போலியானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக