வியாழன், 16 செப்டம்பர், 2010

மன்னார் நகர சபை ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு..!

மன்னார் நகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் கெ.பாஸ்கரன் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து மன்னார் நகர சபை ஊழியர்கள் அதனைக் கண்டிக்கும் வகையிலும் நீதி கேட்டும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். அங்கு சென்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலையீட்டை அடுத்து பணிப் பகிஸ்கரிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.சுகாதார மேற்பார்வையாளர் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குச் சென்று முறைப்பாடு ஒன்று தொடர்பாக கேட்ட போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் தொடர்ந்தும் நகரசபை சுகாதார ஊழியர்கள் தாக்கப்படுவதாக கூறி காலை 6மணி முதல் மன்னார் நகரசபைக்கு முன்பாக அனைத்து சுகாதார ஊழியர்களும், அலுவலகர்களும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பணிப்பகிஸ்கரிப்பிலும் போராட்டத்திலும் இறங்கினர். இதனைத் தொடர்ந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் மன்னார் நகர சபை பகுதியில் குவிக்கப்பட்டனர். பின் சம்பவம் அறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சம்பவ இடத்திற்குச் சென்று சுகாதார ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையினை நடத்தினர். இதன்போது எதிர்வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்கு சகல நடவடிக்கைகளினை மேற்கொள்வதாகவும் இத்துடன் பணிப் பகிஸ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுகாதார ஊழியர்களிடம் வேண்டு கோள்விடுத்தார். பின் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக