வெள்ளி, 17 செப்டம்பர், 2010

இலங்கையர்கள் உள்ளிட்ட 31பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தல்..!!

இலங்கையர்கள் உள்ளிட்ட 31பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கொரியாவில் பல குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொரிய விமான நிலையத்தில் கடந்த 2வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கைவிரல் அடையாளம் பெறும் புதிய திட்டத்தினை அடுத்தே அவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் விசா காலாவதியாகியும் கொரியாவில் வசித்து வருகின்றமை உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொரிய நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 25ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக