ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வட மாகாணத்தில் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது..!

வட மாகாணத்தில் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இதன்பொருட்டு பதில் தேர்தல் ஆணையாளர் பி.எம்.சிறீவர்த்தன நாளை வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தும் பணிகளில் பதில் தேர்தல் ஆணையாளரே ஈடுபட்டு வருகின்றார். இவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்ப்பட்டியலிலுள்ள பிரச்சினைகள் பற்றி ஆராயவுள்ளார். வடமாகாண வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் முறையிட்டிருந்ததையடுத்தே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக