செவ்வாய், 20 ஜூலை, 2010

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர் – ஆஸி உயர்ஸ்தானிகராலயம்..!

புகலிடக் கோரிகi;க மறுக்கப்பட்ட இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மீளவும் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. நாட்டில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளதனால் மிக சொற்ப அளவிலானவர்களுக்கே புகலிடம் வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவன வழிகாட்டல்கள் மற்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட் கடத்தல்காரர்களிடம் பெருமளவு பணத்தை செலுத்தி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைப்பு காட்ட வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படக் கூடிய சாத்தியம் வெகுவாக குறையக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக