செவ்வாய், 22 ஜூன், 2010

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான குழு முல்லைத்தீவு விஜயம்..!

பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் நேற்று முல்லைத்தீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு, மீள்குடியேற்றம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர். முல்லைத்தீவு, வற்றாப்பளை, முள்ளியவளை உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம்செய்த இவர்கள் அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன் மதிப்பீடும் செய்துள்ளனர். முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் யுத்தத்திற்குப் பிந்திய நிலைமைகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றும் பணிகள் இராணுவம் மற்றும் சிவிலியன்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான உயரதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கியுள்ளனர். வட்டப்பளை பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக