சனி, 1 மே, 2010

யுத்த காலத்தை விடவும் தற்போது தொழிலாளர்கள் கூடுதலான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள நேரிட்டுள்ளது - ரணில் விக்ரமசிங்க மே தின செய்தியில்..!

மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச தொழிலாளர்கள் பெருமையுடன் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் சந்தர்ப்பத்தில் இலங்கை உழைப்பாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தை விடவும் தற்போது தொழிலாளர்கள் கூடுதலான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் இழக்கப்பட்டமை தொழிலாளர்களுக்கு பல்வேறு வழிகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இலங்கைகான சலுகைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு மக்கள் மீது மெய்யான கரிசனை காணப்படுமாயின் மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக