ஞாயிறு, 23 மே, 2010

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைச்சர் பீரிஷ் ஐ.நா செயலருடன் பேச்சு..!!

இலங்கைமீது அடிக்கடி குற்றஞ்சாட்டப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று அல்லது நாளை ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையில் கடந்தவருடம் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர்குழு ஒன்றை நியமிக்க ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், அவரை அமைச்சர் பீரிஸ் ஐ.நா தலைமை யகத்தில் சந்திக்கவுள்ளார். மனிதஉரிமைகள் தொடர்பாக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பீரிஸ் பான்கீ மூனுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சனல்4 தொலைக்காட்சிமூலம் வெளிவந்துள்ள, தமிழ் இளைஞர்கள்மீதான சித்திரவதை மற்றும் கொலைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்தும் அமைச்சர் பீரிஸ், மூனிடம் எடுத்துரைக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரனையும் அமைச்சர் பீரிஸ் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக