சனி, 8 மே, 2010
குழந்தைகளை பராமரிக்க இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட தாய்மீது கொடுமை..!!
தமது குழந்தைகளைப் பராமரிப்பதற்கென இலங்கையிலிருந்து 76வயதான தாயை வரவழைத்த தமிழ் பெண்ணொருவரும் அவரது கணவரும் அந்தத் தாயை பெரும் கொடுமைக்குள்ளாக்கியிருப்பதாக ரொறொன்ரொவில் இருந்து வெளிவரும் ஊடகம் தெரிவித்துள்ளது. நேறஉழஅநச றுழஅநn’ள ளுநசஎiஉநள வுழசழவெழ என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆயலய சுழல என்பவரை மேற்கோள்காட்டி செய்தி இந்த தகவல் ஊடகத்தில் வெளியாகியுள்ளது. இந்த வயது முதிர்ந்தவர் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்த போதிலும் தனது பேரக் குழந்தைகள்மீது கொண்ட பாசத்தினால் தாம் இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டதாகத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னை வயோதிபர் இல்லத்திற்கு அனுப்பிவிடப் போவதாக மகளும் மருமகனும் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள மூதாட்டி, தான் வேறு எவருடனும் தொடர்பு கொள்ள முடியாதபடி தடுக்கப்பட்டதாகவும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதற்குக் கூட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக