சனி, 8 மே, 2010
மலையக தலைமைகள் ஒன்றுபட்டு எமது உரிமைகளை வென்றெடுக்கவென இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்..!!
சிறுபான்மைத் தமிழர்கள் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மலையக தலைமைகள் பேதங்களை மறந்து ஒரே குடையின்கீழ் ஒன்றுபட்டு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எமது இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் முயற்சிக்க வேண்டுமென முன்னாள் உடபளாத்த பிரதேச சபையின் உபதலைவர் ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்படும்போது சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியும். எதிர்காலம் சிறுபான்மை மக்களுக்கு ஒரு கேள்விக்குறியான காலகட்டமாகவே அமையப்போகிறது என்பது திண்ணம். எனவே, நமது முன்னிருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு ஒன்று சேர்ந்து செயற்படுவது கட்டாயமானது. மலையக மக்களைப் பொறுத்தவரை கடந்த 60 வருடகால தொழிற்சங்க வரலாற்றைக் கொண்ட பலமான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{டன் சேர்ந்து செயற்படுவதும் ஒருஅணியில் திரள்வதும் காலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக