வியாழன், 20 மே, 2010

சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் ‐ கோதபாய ராஜபக்ஷ..!

சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். யுத்தம் வெற்றியீட்டப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலி ஆதரவு அமைப்புக்களினால் உலக நாடுகளில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சகல பிரதேங்களையும் அரசாங்கம் மீட்டெடுத்து, சமாதானத்தை நிலைநாட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சியம், க்ளோபல் தமிழ் போராம் போன்ற பல்வேறு வழிகளில் பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை புலி ஆதரவாளர்கள் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழிமுறை என்ற போர்வையில் நாட்டை பிளவடையச்n செய்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பயங்கரவாதம் மீளவும் தலை தூக்காமல் இருப்பதனை உறுதி செய்வதற்கு காவல்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக