சனி, 22 மே, 2010

மனிதஉரிமை கண்காணிப்பகத்தின் நடவடிக்கைகளை சாடும் அரசாங்கம்..!!

மனிதஉரிமை கண்காணிப்பகத்தின் நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் மனிதஉரிமை கண்காணிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அல்லது சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்களை நடத்தும்போது மனிதஉரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனை வழமையாகக் கொண்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செனல் ஊடகத்தில் வெளியான தகவல்கள் உண்மையானவை என்பதனை நிரூபிக்குமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட சவாலை அந்த ஊடகம் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை. சில சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்டுவரும் கருத்துக்களுக்கு அரசாங்கம் அதிகம் முக்கியத்துவமளிப்பதில்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்ல காரியங்களை திரிபுடுத்துவதனை குறித்த அமைப்புக்கள் வழமையாகக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக