செவ்வாய், 11 மே, 2010
றீகன் கைது செய்யப்படவில்லை : ஸ்டாலின் தெரிவிப்பு..!!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் றீகன் கைது செய்யப்படவில்லை, அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிக்க நாமே அவரை பொலிஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம் என கைத்தொழில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் ஸ்டாலின் தெரிவித்தார். சாவகச்சேரி நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள றீகன் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கேட்ட போதே ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, றீகன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் அவரைக் கூடிய விரைவில் விடுதலை செய்யவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக