தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) முக்கியஸ்தர்களான வன்னி மாவட்டப் பொறுப்பாளர் பவன் எனும் சிவநேசன் நிர்வாகப் பொறுப்பாளர் ஆர்ஆர் எனும் ஆர்.ராகவன் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன் உட்பட புளொட் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இருதினங்களாக முல்லைத்தீவு, வற்றாப்பளை, குமுளமுனை, தண்ணீர்ஊற்று, சிலாவத்தை, ஒட்டிசுட்டான் உட்பட மீள்குடியேற்றப்பட்ட பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து மீள்குடியேறிய மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்ததுடன் மீள்குடியேறிய மக்களின் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமாரனையும் மற்றும் பல அரச அதிகாரிகளையும் சந்தித்து உரையாடி உள்ளனர். அத்துடன் வித்தியானந்தாக் கல்லூரி அதிபர் திரு.கே.சிவலிங்கம் உட்பட பல புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் சந்தித்து உரையாடியுள்ளதுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் தீர்த்தோற்சவ வைபவத்திலும் கலந்து சிறப்பித்துள்ளனர். மேற்படிச் சந்திப்பில் புளொட்டின் சிரேஸ்ட உறுப்பினரான திரு. சார்லி கந்தப்பாவும் கலந்து கொண்டுள்ளார். (தகவல் மற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் தீர்த்தோற்சவ வைபவ புகைப்படங்கள்.. ஊடகப்பிரிவு -புளொட் தலைமையகம் -கொழும்பு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக