புதன், 12 மே, 2010

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்..!

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சின் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் எனவும் அதனால் அந்த அமைச்சுக்கு பிரதியமைச்சரை இம்முறை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவையில் ஊடகத்துறை பிரதியமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்ட போதிலும் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவர் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துகொண்டதுடன் அவருக்கு நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பதவியே வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக