
அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பல வருடங்களாக நடைமுறையில் இருந்துவந்த இந்த ஒழுங்கு விதிகள் நீக்கப்படுவதால் நாட்டுமக்கள் பாரிய நன்மை பெற்றுக்கொள்வர் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கையை சகல மக்களும் வரவேற்றுள்ளனர். ஊரடங்குச் சட்டம், வீடுகளில் குடியிருப்பவர்கள் பொலிஸில் பதிவுசெய்யும் நடைமுறை, தனியார் கட்டடங்களிலும் வீடுகளிலும் தேடுதல் நடத்துதல், வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளில் வீதித் தடைச்சோதனை என்ற சரத்துகள் நீக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக