வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

உள்நாட்டு விசாரணை! புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிடுகின்றது அஜித் பெரேரா...!!

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எதிர்த்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளக விசாரணைகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக புரிந்து கொள்ளவில்லை.

இவ்வாறான ஓர் நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி விசாரணைகளை எதிர்த்து வருகின்றது.

சகல தரப்பும் சகல விடயங்களையும் உள்ளடக்கும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைகள் தொடர்பில் பிற்போக்கான நிலைப்பாட்டை பின்பற்றக்கூடாது.


உரிய சட்ட திட்டங்களுக்கு அமைய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை அரசாங்கம் வழங்கும்.

எனவே, விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

புதிய அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகள் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு அடுத்த அமர்வுகள் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க பின்னிற்கப் போவதில்லை என அஜித் பெரேரா சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக