இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான சனத் ஜயசூரியவின் வாகனத் தொடரணிமீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் சனத் ஜயசூரியவின் பிரத்தியேக செயலாளர் மயிரிழையில் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தசம்பவம் தொடர்பில் சனத் ஜயசூரிய உடனடியாக ஜனாதிபதி மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு வாகனத் தொடரணிமீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்த விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
சனத் ஜயசூரியவின் வாகனத் தொடரணிமீது துப்பாக்கிப் பிரயோகம்..!
 இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான சனத் ஜயசூரியவின் வாகனத் தொடரணிமீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் சனத் ஜயசூரியவின் பிரத்தியேக செயலாளர் மயிரிழையில் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தசம்பவம் தொடர்பில் சனத் ஜயசூரிய உடனடியாக ஜனாதிபதி மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு வாகனத் தொடரணிமீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்த விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக