செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் கூடுகிறது, புதிய பத்துரூபா நாணயம் வெளியீடு..!

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்காகப் பாராளுமன்றம் இன்று 6ம் திகதி காலை 9.30மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் வகையில் இன்று இரண்டாவது தடவையாக பாராளுமன்றம் கூடுகின்றது. இதேவேளை புதிய பத்து ரூபா நாணயக் குற்றியொன்றை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையை வெளியிடும் வைபவம் நேற்று மத்திய வங்கியில் நடைபெற்றது. முதலாவது நாணயக் குற்றியை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக