செவ்வாய், 13 ஏப்ரல், 2010

போட்டி காரணமாக, மீண்டும் பிரதமர் பதவி ரட்னசிறி விக்ரமநாயக்கவிற்கே?!

அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக, மீண்டும் பிரதமர் பதவியை ரட்னசிறி விக்ரமநாயக்கவிற்கே வழங்குவதற்கு ஜனாதிபதித் தீர்மானித்துள்ளார். இதன்படி, விருப்பு வாக்கு அடிப்படையிலோ அல்லது சேவை மூப்பு அடிப்படையிலோ பிரதமர் பதவியை வழங்காது, ஏற்கனவே பிதமர் பதவியை வகித்த ரட்னசிறி விக்ரமநாயக்கவை ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்வார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும 21ம் திகதி அமைச்சுப் பதவிகள் குறித்து அறிவிக்கப்படவுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கை 35‐40 ற்குள் வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இம்முறை தேர்தலில் வெற்றியீட்டிய எவருக்கும் அமைச்சுப் பதவிகளோ அல்லது பிரதி அமைச்சுப் பதவிகளோ வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் சிரேஸ்ட புதல்வர் நாமல் ராஜபக்ஷவிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை வகித்த பலர் இம்முறை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக