செவ்வாய், 13 ஏப்ரல், 2010

ஜீ.எல்.பீரிஸ். மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டிசில்வா வெளிநாட்டு அமைச்சுக்கு போட்டி

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்தசமரசிங்க ஆகிய முன்னாள் அமைச்சர்கள் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சப் பதவியை எதிர்பார்த்துள்ள நிலையில் அந்த அமைச்சை நிமல் சிறிபால டிசில்வாவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தடன் நிமல் சிறிபாலடி சில்வா வகித்து வந்த சுகாதார அமைச்சுப் பொறுப்பை,ஜோன் செனவிரத்னவிற்கு வழங்கப்படவுள்ளது. மேலும் மின்வலு எரிசக்தி அமைச்சர் ஜாதிக ஹெல உறுமயவின் ஆலோசகர் சம்பிக்க ரணவக்கவிற்கும் கல்வி அமைச்சு கலாநிதி சரத் அமுனுகமவிற்கும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு குமார் வெல்கமவிற்கும் வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பிரபல நடிகை மாலினி பொன்சேகாவை கலாச்சார பிரதியமைச்சர் ஆக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய வருகிறது. இதுகுறித்து தெரியவருகையில் பிரபல நடிகை மாலினி பொன்சேகாவை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அவருக்கு கலாச்சார பிரதியமைச்சர் பதவியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கிறது. கலாச்சார அமைச்சு பதவி பிரபல எழுத்தாளர் ஜே.ஆர்.பி.சூரியபெருமவிற்கு வழங்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தின் தலைவர் பதவி பிரபல சிங்கள திரைப்பட தயாரிப்பாளர் ரேணுகா பாலசூரிய தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி ஜக்ஸன் அந்தனி ஆகியோருக்கு வழங்கப்பட விருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக