ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இலங்கை விவகாரங்களில் பான்கீமூன் தலையிடக்கூடாது –கருணாஅம்மான்

இலங்கை விவகாரங்களில் பான் கீ மூன் தலையீடு செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். திவயின பத்திரிகைக்கு வழங்கிய விஷேட நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினைகளை விடவும் உலக நாடுகளில் பாரிய பிரச்சனைகள் காணப்படுவதாகவும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாரிய பிரச்சனைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் சக்திகளே இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் புலம்பெயர் தமிழர்களுடன் கூடுதல் தொடர்பினை பேணி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தனிப்பட்ட அதிகார ஆசை காரணமாக தமிழ் அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்;ளார். கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 22 தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் தாம் தமிழ் மக்களுக்கு பல்வேறு வழிகளில் சேவையாற்றி உள்ளதாகவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக