ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஆளும் கட்சி அமைச்சர்கள் உலங்கு வானூர்த்தியில் தேர்தல் பிரச்சாரம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் விமானப்படையின் உலங்குவானூர்தியை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் குருநாகல் மாவட்ட வேட்பாளரும் பிரதி சுகாதார அமைச்சருமான ஜயந்த ஹேரத் இந்த செயலை மேற்கொண்டுள்ளார். உலங்குவானூர்தி மூலம் தமது பிரச்சார கையேடுகளை விநியோகித்துள்ளார். இதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 212வகை உலங்குவானூர்தியை வாடகைக்கு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை இரண்டு மணித்தியாலங்களுக்கு அவர் வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளார். இதற்காக இவரிடம் இருந்து ஒரு மணித்தியாலத்துக்கான வாடகைப் பணமாக 2150 டொலர்கள் அறவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக