வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ரஞ்சிதாவை நித்தியானந்தா கற்பழிக்கவில்லை – உயர்நீதிமன்றத்தில் கர்நாடக சிஐடி போலீஸ் தகவல்..!

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்கவில்லை, பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. பலவந்தப்படுத்தவில்லை என்று கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக நித்தியானந்தா இருந்த்து தொடர்பான வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். பின்னற் இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி அரளி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது நித்தியானந்தாவின் வக்கீல் வாதாடினார். மேலும், அரசு வக்கீலும் வாதாடினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் ஏப்ரல் 21ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டது.முன்னதாக சிஐடி எஸ்.பி. யோகப்பா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற சி.டி. ஆதாரத்தை பார்க்கும் போது நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை பலாத்காரம் செய்யவில்லை. சி.டி.யில் நடிகையின் முகம் சரியாக தெரியவில்லை என்று கூறப்பட்டிருந்தது.அதேசமயம், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நித்யானந்தா கற்பழிப்பு, முறையற்ற உறவு, மோசடி ஆகியவற்றுக்கு சி.டி. ஆதாரமே போதுமானது என்றும், மதநம்பிக்கையை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்த்து.இதை விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு புகார் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுத்து இருக்கிறார்களா? என்று கேட்டார். ஆனால் அப்படி எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறிய அரசுத் தரப்பு வக்கீல் ஆனால் சாமியாருக்கு எதிரான சி.டி.ஆதாரமே போதுமானது என பதிலளித்தார்.இதற்கிடையே, நித்தியானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் அவரைப் பிடிக்க முடியாமல் இருப்பதாக சிஐடி எஸ்.பி. யோகப்பா கூறியுள்ளார். அதேசமயம், இதுவரை கிடைத்துள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக