வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைள் தொடர்கிறது-இலங்கை அரசு குற்றச்சாட்டு..!

புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டபோதிலும், சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைள் தொடர்வதாக இலங்கையரசு குற்றம் சுமத்தியுள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாக பிரேசிலிலுள்ள இலங்கையத் தூதுவர் ஏ.எம்.ஜே.சாதிக் தெரிவித்துள்ளார். புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளின் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் மூன்றுமுதல் 500கோடி அமெரிக்க டொலர்கள் வரையில் காணப்படலாமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் சர்வதேச சொத்துக்களை முடக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென்வும், இப்பணத்தைக் கொண்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். மன்னாரில் ஆவணங்களை இழந்த மக்களுக்கான நடமாடும் சேவைகள்- நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பிரசேதங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டத்தின்கீழ் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு சட்ட மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சி;ன சட்டத்தரணி கே.டிலானி தெரிவித்துள்ளார். அவ்வகையில் மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரபிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை இன்;று அல்அஸார் மத்திய மகா வித்தியாலயத்திலும், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவையானது நாளை அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்திலும், முசலி பிரதேச செயலகத்துக்கான நடமாடும் சேவை 25ம் திகதி சவேரியார்புரம் மத்திய மகாவித்தியாலயத்திலும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் ஆவணங்களை இழந்த மக்களுக்கான இந்த நடமாடும் சேவை பல்வேறு உதவிகளைப் பெற ஏதுவாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது. பிறப்பு, இறப்பு, விவாகம் பதிவுகளுக்கான பிரதிகளை இதன்மூலம் பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக