வியாழன், 1 ஏப்ரல், 2010

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் இசைக்குழு சென்ற வாகனம் ரயிலில் மோதியதில் மூவர் பலி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் எஸ்.பி.திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் இசைக்கச்சேரி நடத்திய குழுவினர் சென்ற வாகனம் ரயிலில் மோதுண்டதில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவேளை கிரிபத்கும்புர பகுதியில் சிவப்பு சமிக்ஞை விளக்கை பொருட்படுத்தாது சாரதி கடவையை தாண்டி செல்ல முற்பட்டவேளை இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரஸ்தாப வாகனம் ரயிலில் மோதுண்டு சுமார் 500மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக