சனி, 10 ஏப்ரல், 2010

நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5தமிழ் உறுப்பினர்கள் தெரிவு..!

இடம்பெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்கேற்ப நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்ட இ.தொ.கா.பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மத்திய மாகாணமுன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் சிரேஷ்ட சட்டத்தரணி இராஜதுரை ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய முன்னணியி;ன் தலைவர் பி.திகாம்பரம் பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஜெ.ஸ்ரீரங்கா ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர் அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் அமைச்சர்களான சி.பி.ரத்நாயக்க நவீன் திஸாநாயக்க ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இலங்கை தொழிலளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.சதாசிவம் தொழிலாளர் தேசிய முன்னணி பிரதித்தலைவர் உதயகுமார் முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமி ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பாரதிதாசன் மலையமக்கள் முன்னணியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் மலையக மக்கள் முன்னணியிலும் போட்டியிட்ட தமிpழ் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறவில்லை. மேலும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்கள் சிலவற்றில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ளதால் கண்டி மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாரா? என்பது குறித்து கூறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக