வியாழன், 29 ஏப்ரல், 2010

இன்னும் த.தே.கூட்டமைப்புக்கு வன்னி செல்ல அனுமதி கிடைக்கவில்லை..!!

வன்னி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக வன்னிப் பிரதேசத்துக்கு செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்திருந்தது. இன்று 29ம்திகதி முதல் மேமாதம் 2ம் திகதிவரை 4நாட்களுக்கு தாம் வன்னிப்பகுதியில் தங்கியிருக்க வேண்டுமென அந்த விண்ணப்பத்தில் அவர்கள் கேட்டிருந்தனராம் ஏனெனில் வரும் மேமாதம் 4ம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொள்ள முன்னர் வன்னி சென்று அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மற்றும் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய தாம் விரும்புவதாக த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இவ்விண்ணப்பத்தை தாம் ஒருவாரகாலத்துக்கு முன்னதாகவே அமைச்சுக்கு திருப்பியனுப்பியிருந்த போதும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக