வெள்ளி, 9 ஏப்ரல், 2010

117 ஆசனங்களுடன் ஆளும் கட்சி முன்னணயில் நிற்கின்றது..!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை தேர்தல் தொகுதிகளைத் தவிர அனைத்து முடிவுகளும் வெளிவந்துள்ளது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4797272 வாக்குகளைப் பெற்று 117 ஆசனங்களுடன் முன்னணியில் நிற்கின்றது. இக்கூட்டணி வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தில் 3 ஆசனங்கள் , வன்னி மாவட்டத்தில் 2 ஆசனங்கள் , திகாமடுல்ல மாவட்டத்தில் 4 ஆசனங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 ஆசனம். மட்டக்களப்பு ஆவாசனத்தை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா தட்டிக்கொண்டுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி எனப்படும் கூட்டணி நாடளாவிய ரீதியில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் 2336691 வாக்குகளைப் பெற்று 46 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இக்கூட்டணியும் வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1 ஆசனம் , வன்னி மாவட்டத்தில் 1 ஆசனம் , திகாமடுல்ல மாவட்டத்தில் 2 ஆசனங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 ஆசனம். சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 212590 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர். திருமலை மாவட்டத்திலும் ஒரு ஆசனம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் 5 ஆசனங்கள் , வன்னி மாவட்டத்தில் 3 ஆசனங்கள், திகாமடுல்ல மாவட்டத்தில் 1 ஆசனம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்கள். ஆதே நேரத்தில் ஒன்பது ஆசனங்களுக்காக யாழ்பாணத்தில் பல சுயெட்சைக் குழக்களும் கட்சிகளும் போட்டியிட்டிருந்தன. அங்கு சுமார் 25000 வாக்குகள் மேற்படி கட்சிகள் பங்கிட்டுக் கொண்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா ஜேவிபி கூட்டான ஜனநாயக தேசிய முன்னணி நாடளாவிய ரீதியில் 439601 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கொழும்பு மாவட்த்தில் 2 ஆசனங்கள் , காலி மாவட்டத்தில் ஒரு ஆசனம் , கம்பஹா மாவட்டத்தில் 1 ஆசனம் , களுத்துறை 1 என ஆசனங்களைப் பெற்றுள்ளனர். ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் களுத்தறை மாவட்டத்திலிருந்து அர்ஜூனா ரணதுங்கவும், கொழும்பு மாவட்டத்திலிருந்து ஜெனரல் பொன்சேகாவும் இக்கூட்டு சார்பாக தெரிவாகியுள்ளதாக தெரியவருகின்றது. விருப்பு வாக்குகளில் மாத்தறை மாவட்டத்தில் சனத் ஜெயசூரியா, ரத்னபுர மாவட்டத்தில் ஜோன் செனவிரத்தின, யாழ் மாவட்டத்தில் சேனாதிராஜா, வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், பொலநறுவ மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன, திகாமடுல்ல மாவட்டத்தில் பி. தயாரத்ன , காலி மாவட்டத்தில் நிஸாந்த முத்துஹெட்டிகம, கம்பஹா மாவட்டத்தில் சுதர்சினி ஜெயராஜ் பெர்ணாண்டோப்பிள்ளை, மாத்தறை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ச , பதுளை மாவட்டத்தில் சிறிபால டி சில்வா , மொனராகலை மாவட்டத்தில் புஸ்பகுமார ஆகியோர் முன்னணியில் நிர்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக