வியாழன், 25 மார்ச், 2010

பிச்சைக்காரனின் புண்போல எல்லாவற்றையும் யுத்தத்தின்மூலம் மூடிமறைக்க முடியாது- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச..!

யுத்தத்தை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை நான் கொண்டிருந்தேன். பயங்கரவாதியை பயங்கரவாதியாக சித்திரிக்க முடியாத யுகத்தை நான் மாற்றியது மட்டுமல்லாது, அதற்குப் பின்னரான சகல சவால்களுக்கும் முகம்கொடுத்து அவற்றை வெற்றிகொண்டேன். இவ்வாறானதொரு நிலைமையில் பிச்சைக்காரனின் புண்போல எல்லாவற்றையும் யுத்தத்தின்மூலம் மூடிமறைக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெற்றிக்குப் பின்னரான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும் தயாரானேன். அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டை ஐக்கியப்படுத்துவேன் என்று மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதுபோல அபிவிருத்தி தேசத்தை கட்டியெழுப்புதற்கான வேலைத்திட்டமும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் வார்த்தையளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதியாக இருப்பதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் தொழிற்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக