புளொட் முக்கியஸ்தர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் வவுனியாவின் நெடுங்கேணிப் பிரதேசத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புளொட் சார்பில் போட்டியிடுபவர்களான புளொட்டின் வன்னி மாவட்ட அமைப்பாளர் திரு. க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும்; முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.வை.பாலச்சந்திரன், புளொட் இயக்க முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினரே நெடுங்கேணிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின்போது மேற்படி தூதுக்குழுவினர் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுக்கான நிவாரணம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட விடயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், இவ்விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளனர். இவ்விஜயம் தொடர்பிலான புகைப்படங்கள் இங்கு தரப்படுகின்றன....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக