ஞாயிறு, 21 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்கள் பொதுமக்கள் சந்திப்பு..!

நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்), பிரான்சிஸ் ரஞ்சித் ரூஸ்வோல்ட் (ஆசிரியர்), துரைசாமி சுந்தர்ராஜ் (சிவசம்பு), வரோனிகா (இந்திரா) மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் இன்றுமுற்பகல் மன்னார் குஞ்சுக்குளம் மற்றும் பெரியமுறிப்பு பகுதிகளுக்கு விஜயம்செய்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருந்தனர். இதன்போது கட்சி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள், எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களுக்கு எடுத்துக் கூறினர். இக்கூட்டங்களில் பெருமளவு பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து முருங்கன் புளொட் காரியாலயத்தில் முன்னாள் கழக அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வவுனியா வேப்பங்குளம் பகுதியின் ஊர்மிளா கூட்டத்தில் புளொட் வேட்பாளர்கள் பொதுக்கூட்டமொன்றினையும், வெளிக்குளத்தில் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றையும் நடத்தினர். இக்கூட்டங்களில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சி தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் இன்றுமாலை வவுனியா, இறம்பைக்குளத்தில் பட்டதாரிகளுடனான சந்திப்பொன்றிலும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் வேட்பாளர்கள் பங்குகொண்டிருந்தனர். இது இவ்விதமிருக்க புளொட் வேட்பாளர்கள் நேற்றையதினம் வவுனியா, புதியசின்னக்குளம் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்கு பொதுக்கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), வ.திருவருட்செல்வன் (மூர்த்தி) மற்றும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக