ஞாயிறு, 21 மார்ச், 2010

முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி..!

சிக்கியிருந்த சிறார்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டான கிரிக்கெட் மீதான அபிமானமானது பெரிதும் உதவுமென்று அரசாங்கம் கருதுகின்றது. இலங்கைச் சிறுவர்களில் அதிகமானோர் யுத்தத்தைப் பற்றி அதிகளவிற்கு அறிந்திருந்தனர். அந்தச் சிறுவர்களுக்கு கிரிக்கெட்டானது உதவுமென்று இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர். இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையும் ஆதரவளித்துள்ளது.அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 320 சிறுவர்கள் யுத்த நிலைமையிலிருந்தும் மீட்சிபெறுவதற்கு கிரிக்கெட் உதவுமென்று அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தச் சிறுவர்களில் சிலர் புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களாகும். ஏனையவர்கள் சிறுவர் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்களாகும். யுத்தத்திலிருந்தும் இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் ஒருவார கால பயிற்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை உளரீதியாக ஆற்றுப்படுத்துவதற்கும் குழுரீதியாகப் பணியாற்றுதல் போன்ற பெறுமானங்களை அவர்கள் கற்றுக்கொள்வதற்கும் இயல்பு வாழ்வை அவர்களுக்கு மீள ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இது உதவுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்."எனக்கு இது விருப்பம். இப்போது எமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. படிப்பு,விளையாட்டில் ஈடுபட நேரம் கிடைத்துள்ளதென%27 15 வயதுடையதான தர்மரெட்ணம் என்ற சிறுவன் ராய்ட்டர் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளான்.புலிகளுக்கு டீசல் இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்ததாகவும் கிளிநொச்சியில் இருந்ததாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். மாற்றத்திற்கான கிரிக்கெட் நிகழ்ச்சித் திட்டத்தில் ஏற்கனவே சித்திபெற்றுள்ள 24 சிறுவர்களில் 18 பேர் முன்னாள் போராளிகள் ஆகும். இந்தப் பயிற்சி ஒருவார காலம் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியினர் விளையாடும் இடமான கொழும்பிலுள்ள சர்வதேச விளையாட்டரங்கில் நின்றுகொண்டிருந்த தர்மரெட்ணமும் ஏனைய சிறுவர்களும் நீல,வெள்ளை ஆடைகளை அணிந்திருந்தனர். நலிந்த நிலையிலிருக்கும் சிறுவர்களுக்கு இந்த நடவடிக்கை மூலம் அதாவது விளையாட்டின் சக்தியை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர்களுடைய முழுமையான ஆற்றலை அவர்கள் விளங்கிக்கொள்வதற்கு இது உதவியாக அமையுமென்று ஐ.நா.வின் சிறுவர்களுக்கான முகவரமைப்பான யுனிசெவ்வின் இலங்கை பிரதிநிதி பிலிப்பி துவாமெல்லி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக