ஞாயிறு, 21 மார்ச், 2010

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வு தொடர்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தல்..!

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு துரிதமாக அரசியல்தீர்வைக் காண்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழகஅரசு நேற்றுமுன்தினம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசு வரவுசெலவுத் திட்டத்தை நேற்றுமுனு;தினம் சட்டசபையில் சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் கே.அன்பழகன், இலங்கைத் தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்தக்கூடிய துரிதமான அரசியல்தீர்வை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் அதிகளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் யுத்தத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் தமது பூர்வீக இடங்களுக்குத் திரும்பிச் செல்லக் கூடியதாகவிருக்க வேண்டும். இப்போதும் தமிழர்கள் முகாம்களில் உள்ளனர். அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் பல வருடங்களாக இருந்துவரும் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் தொடர்பாக அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது. அவர்களுக்கான நிதியுதவியை தி.மு.க.ஆட்சி இரு மடங்காக்கியுள்ளது. முகாம்களில் உள்சார்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடிரூபா வழங்கப்படுமென அரசு அறிவித்திருந்தது. வீடுகள் மற்றும் ஏனைய உள்சார்கட்டமைப்புப் பணிகளுக்கான வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசாங்கத்தை நாம் கேட்டிருக்கின்றோம் என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக