வெள்ளி, 12 மார்ச், 2010
சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் தடுக்க அவுஸ்திரேலியா இந்தோனேசியா புதிய திட்டம்..!
அவுஸ்ரேலியாவுக்குள் இலங்கையர்கள் உட்பட சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக இந்தோனேசியாவும் அவுஸ்ரேலியாவும் திட்டம் ஒன்றை வரைந்துள்ளன. இந்தோனேசிய பிரதமந்திரி அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையிலேயே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுத்தொடர்பில் கருத்துரைத்துள்ள அவுஸ்ரேலிய வெளியுறவுதுறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தமது திட்டத்தை வெளியிட முடியாது என அறிவித்துள்ளார். இந்தோனோசியா ஊடாக அவுஸ்ரோலியாவுக்குள் ஊடுருவும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்காக இரண்டு நாடுகளும் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுவந்தன. இந்த நிலையிலேயே இந்த புதிய வரைபு இறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். தமக்கிடையிலான உடன்பாடு குறித்து தகவலை வெளியிட்டால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சட்டவிரோத குடியோற்ற வாசிகளை கடத்துபவர்கள் மத்தியில் இருந்து தடைகள் ஏற்படுத்தப்படலாம் எனவும் அவுஸ்ரேலிய வெளியுறவுதுறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக