செவ்வாய், 9 மார்ச், 2010

புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பு..!

விடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 கிழமைகளுக்குள் இவர்களுடைய கோரிக்கை மற்றும் மீள் குடியேற்றம் குறித்து கவனம் செலுத்துமென உறுதியளித்திருந்தது.இவ் உறுதிமொழியை அடுத்து இலங்கை அகதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.இந்நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்'அவர் விடுதலை புலிகளின் நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியிருக்கலாம்.எனினும் அவர் விடுதலை புலி உறுப்பினர் அல்லர்' எனத் தெரிவித்தார்.மோதல் முடிவடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைகளுக்குக் கீழ் பணியாற்றுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என ஏற்கனவே நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக இப்பெண் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் தனது இரு பிள்ளைகள்இ தாய்இ மற்றும் சகோதரருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கப்பல் மூலம் பயணித்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக