
அரசிற்கு எதிராக செயற்பட்டதாக ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயத்திலிருந்து கைது செய்யப்பட்ட 14 பேரையும் கொழும்பு நீதிமன்று எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நேற்று விடுதலை செய்துள்ளது. கைது செய்யப்பட்டதிலிருந்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் (டிஓ) தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய குற்றப்புலனாய்வுத்துறையினர் அவர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி கோரியபோது, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீதிவான் கோரியுள்ளார். குற்றச்சாட்டுக்களை சீஐடி யினர் முன்வைக்க தவறியபோது, அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நீதவான் செல்வி சம்பா ஜானகி ராஜரட்ண விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். 14 பேரில் ஒருவர் சாதாரண பிரஜை , ஏனைய 13 பேரும் முன்னாள் இராணுவ மற்றும் விமானப்படையை சேர்ந்தோராகு
ம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக