புதன், 20 ஜனவரி, 2010

தேர்தல் ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்ய தீhமானம்

தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 26ம்திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களின் பின்னர் தமது பதயை இராஜினாமா செய்ய தயானந்த திஸாநாயக்க உத்தேசித்துள்ளார். தேர்தலை நியாயமான முறையில் நடாத்துவதற்கு அரசியல்கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை எனவும், இதனால் தாம் பதவிவிலக உத்தேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி பொதுச்செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களது பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையாளர் நடத்திய விசேட சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்ததாக ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊடகங்களின் பக்கச் சார்பு தன்மை தொடர்பில் கண்காணிப்பதற்கு தம்மால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியை வாபஸ் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகங்கள் தேர்தல் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக