புதன், 20 ஜனவரி, 2010

இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட முடியாது -கலாநிதி பாலித கொஹன..!!

இலங்கையர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட முடியாது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை வழங்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில நாடுகள் இலங்கைமீது குற்றம் சுமத்திய போதிலும் சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சில பலம்பொருந்திய நாடுகள் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அங்கம் வகிக்கவில்i எனவும், இதனால் இலங்கையர்களுக்கு எதிராக குறித்த நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இலங்கையர்கள் எவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டிக்கப்படுவதற்கான சாத்தியம் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில நாடுகள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்த முனைப்பு காட்டுகின்றபோதிலும், பலநாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பொறுப்பு வாய்ந்த சர்வதேச சமூகம் இலங்கையின் புனர்வாழ்வு, அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமான பணிவிருத்தி ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக