கடந்த தேர்தல் காலங்களை விட இம்முறை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தேர்தல் அணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினமான எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8.30 மணிமுதல் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கக் கூடியதாக இருக்கும். 26 ஆம் திகதி வாக்களிப்புகள் அனைத்தையும் அன்றைய தினம் 8.00 மணிமுதல் கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. அடைமழை பெய்யுமாயின் ஆகாய மார்க்கமாகவே வாக்குப் பெட்டிகளைக் கொழும்புக்குக் கொண்டு வருவோம். ஆதலால் சில வேளைகளில் முடிவுகள் தாமதமாகலாம். எவ்வாறெனினும் துரிதகதியில் முடிவுகளை அறிவிக்கும் வகையில் நாம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் ஆணையாளர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக