செவ்வாய், 5 ஜனவரி, 2010
பாராளுமன்றம் பெப்ரவரி 05ம் திகதிவரை ஒத்திவைப்பு..!!
இன்றைய அமர்வுகளின் நிறைவுடன் பாராளுமன்றத்தை பெப்ரவரிமாதம் 05ம் திகதிவரை ஒத்திவைக்க வேண்டுமென ஆளும் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான யோசனை இன்று சபையில் முன்வைக்கப்பட்டதையடுத்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இன்றுகாலை பாராளுமன்றம் கூடியபோது இன்றைய அமர்வுகளின் நிறைவுடன் பாராளுமன்றத்தை பெப்ரவரி 05ம்திகதிவரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியபோது எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து கடும் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. பின்னர் குறித்த யோசனைமீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக