புதன், 6 ஜனவரி, 2010
தமிழினம் ஒருபோதும் அற்பசொற்ப சலுகைகளுக்கு விலை போகாது -ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்..!!
தமிழினம் ஒருபோதும் அற்பசொற்ப சலுகைகளுக்கு விலை போகாதென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டநீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் மூலமாக தமிழ் மக்களுக்கு கிடைப்பது ஒன்றுமில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புலிகள் என்று சந்தேகித்து தடுத்து வைத்துள்ள இளைஞர் யுவதிகளை சர்வதேசத்தின் முன் விடுவிக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறும் ஜெனரல் சரத்பொன்சேகா அவசரகால சட்டத்திற்கு எதிராக இன்று நாடாளுமன்றில் வாக்களிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் சிவாஜிலிங்கம் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் தான் பணம் பெற்றுக் கொண்டு போட்டியிடுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக