புதன், 6 ஜனவரி, 2010
கிளிநொச்சியில் ஐந்து பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 700மாணவர்கள் வருகை..!!
2010ம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் சுமார் 700மாணவர்கள் நேற்று தமது பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி, புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலை, கனகபுரம் மகாவித்தியாலயம், புனித திரேசா பாடசாலை உள்ளிட்ட ஐந்து பாடசாலைகளுக்கே மாணவர்கள் சமூகமளித்திருந்ததாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஐந்து பாடசாலைகளின் திறப்பு நிகழ்வின் போது யாழ்ப்பாணத்திலிருந்தும் வவுனியாவிலிருந்து ஆசிரியர்கள் வருகை தந்ததாக தெரிவித்த ஆளுநர், குறித்த ஆசிரியர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக