இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், போரில் ஈடுபட்டதாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஒரு பொதுமன்னிப்பு என்ற அடிப்படையில் மறுவாழ்வு அளிக்கப்போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா உறுதியளித்துள்ளார். தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால், தகுந்த ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நபர்களையும் ஒரு மாதகாலத்துக்குள் விடுவிக்கப்போவதாக பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது அமலில் இருக்கும் அவசரகாலப் பிரகடனமும் அதன்கீழான அனைத்து விதிகளும் முடிவுக்கும் கொண்டுவரப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக