செவ்வாய், 5 ஜனவரி, 2010
அவசரகால சட்டம் மேலதிக 79வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!
அவசரகால சட்டம் மேலதிக 79வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தினை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பிரேரணைமீதான விவாதங்கள் இடம்பெற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கு ஆதரவாக 97வாக்குகளும், எதிராக 18வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரேரணைக்கு ஆதரவாக அரசுடன் சேர்ந்துள்ள கூட்டுக் கட்சிகள் வாக்களித்தன. எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது. வாக்கெடுப்பின்போது ஐ.தே.கட்சி, ஜே.வி.பி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன சபையில் இருக்கவில்லை. இதேவேளை 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம்திகதி முதல் அவசரகாலசட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக